சிவா,

வேற்றமை உருபுகள் குறித்த விவரத்தினை இம்மடலில் பகிர்ந்துகொள்கிறேன்.

1) முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் கிடையாது

உதாரணம்

மாதவன் பாடினான்

இளமதி என் மகள்

கலையரசி என்பவள் யார்?

2) இரண்டாம் வேற்றுமை உருபு

உதாரணம்

அழகன் சிலையைச் செதுக்கினான்

கண்ணன் சினத்தை விடுத்தான்

3) மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு

உதாரணம்

தமிழால் உயர்வு கிட்டியது

அறத்தான் வருவதே இன்பம்

கடிதத்தொடு பணமும் வந்தது

தலைவரோடு தொண்டரும் வந்தனர்

இதைத் தவிர கொண்டு மற்றும் உடன் சொல்லுருபுகளாகும்

வேல்கொண்டு தாக்கினான், மின்னலுடன் மழையும் பெய்தது

4) நான்வேகாம் வேற்றுமை உருபு கு ஆகும்

உதாரணம்

பாரிக்கு நண்பர் கபிலர்

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டனர்

இதைத் தவிர ஆக, பொருட்டு முதலிய சொல்லுருபுகள் உண்டு

பணத்திற்காக பாவம் செய்யாதே

தலைவரின்பொருட்டுச் செயலாளர் வந்திருந்தார்

5) ஐந்தாம் வேற்றுமை உருபு இல், இன் ஆகும்

உதாரணம்

பழனியின் கிழக்கு மதுரை

பாட்டுப் பாடுவதில் வல்லவன்

இதைத் தவிர இருந்து, நின்று, விட, காட்டிலும் முதலியன சொல்லுருபுகளாகும்.

6) ஆறாம் வேற்றுமை உருபு அது, ஆது, அ

உதாரணம்

கம்பரது பாட்டு

எனாது கை

என கைகள்

இதன் சொல்லுருபு உடைய ஆகும்.

7) ஏழாம் வேற்றுமை உருபுகள் இல், கண், இடம், உள், மேல்

வீட்டில் யாரும் இல்லை

மலைக்கண் மூலிகை

பிறரிடம் பகை கொள்ளாதே

மாணவர்களுள் செழியனே சிறந்தவன்

தலைமேலுள்ள சுமை

ஏழாம் வேற்றுமையில் இடப்பொருளில் மட்டும் இல் உருபு வரும்.

8) எட்டாம் வேற்றுமை உருபு எதுவும் கிடையாது

உதாரணம்

கந்தா வருக

--

அன்புடன்,

ஆமாச்சு.

http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!